×

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை

டெல்லி: இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் கணக்குதாரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 71 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ் ஆப் பயன்போடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்துடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு இணையாக மோசடி, முறைகேடான கணக்குகள் தடை செய்யப்பட்டும் வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இந்தியாவில் இயங்கி வரும் சமூக ஊடகங்கள் தங்களது மாதாந்திர நடவடிக்கைகளை ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்தி வருகின்றன. மேலும்
வாட்ஸ் ஆப் பயனர்களின் புகார்கள் முதல் அரசின் பரிந்துரை வரை பல தரப்பிலான கோரிக்கைகளின் கீழ் முடக்கப்படும் சமூக ஊடக கணக்குகள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் ஆப் தொடர்பான தகவல்களும், நடவடிக்கைகளும் மெட்டா வாயிலாக அறிவிக்கப்பட்டுவருகிறது. மேலும் பயனர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் அடிப்படையில் வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகின்றன. பயங்கரவாதம், குழந்தைகள் பாலியல், போதைமருந்து கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் கணக்குதாரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 71 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டுமே 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : India ,WhatsApp ,Delhi ,Meta Administration ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...