×

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை: நகராட்சி தலைவர் தலைமையில் நடந்தது

 

பெரம்பலூர்,டிச.28: பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந் திரன் தலைமையில் நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனைமுகாம் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல், கண் பரிசோதனைகள் மற்றும் சர்க்கரை, பரிசோதனைகளை சுகாதார துறை யினர் மேற்கொண்டனர்.

பிசியோதெரபி, யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம், நோய்களுக்கு உரிய ஆங் கில மருந்துகள், ஆலோச னைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சிதுணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணை யர் ராமர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், டாக்டர் அரவிந்தன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை: நகராட்சி தலைவர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ambika Rajendran ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்