×

₹3.13 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ அமர்நாத் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், குட்கா பொருட்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த மகாராஜன் (41) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ₹3 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 491 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

The post ₹3.13 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,SI Amarnath ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்