×

தம்பதியை தாக்கிய தொழிலாளிக்கு வலை

மல்லசமுத்திரம், டிச.24: மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்கலம் அருகே உள்ள பாரக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(57), ஆட்டையாம்பட்டி அடுத்த நைனாம்பட்டியைச் சேர்ந்த இளங்கோ(40) ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளிகள். கடந்த 8ம் தேதி, இளங்கோவிடம் காளிப்பட்டி கோணங்கிபட்டியைச் சேர்ந்த தொழிலாளிகள் பிரகாஷ், பழனிச்சாமி ஆகியோர், முன்தொகையாக விறகு வெட்டுவதற்கு பணம் வாங்கினர். ஆனால் அவருக்கு வேலை செய்ய வராமல், சுப்பிரமணியிடம் வேலைக்கு சென்றனர்.

இதுதொடர்பாக இளங்கோ, சுப்பிரமணி வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோரை, ஜாதிபெயரை சொல்லி திட்டி, இளங்கோ சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தம்பதியினர் நேற்று மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் எஸ்ஐ ரஞ்சித்குமார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளங்கோவை தேடி வருகிறார்.

The post தம்பதியை தாக்கிய தொழிலாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Subramani ,Barakadu ,Mangalam ,Nainambatti ,Attaiyambatti ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...