×

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பள்ளிபாளையம், ஜூன் 5: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக பெற்ற வெற்றியால், பள்ளிபாளையம் வீ.மேட்டூர் பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர். கடந்த முறை தமிழகம், பாண்டிச்சேரியில் 39 இடங்களில் வென்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள், இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடும் வகையில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் வீ.மேட்டூர் பகுதியில் காவடியாங்காடு வீ.மேட்டூர் திமுக நிர்வாகிகள் ஈஸ்வரன், கதிர்வேல், மதியரசு உள்ளிட்ட திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,DMK ,Tamil ,Nadu ,parliamentary ,Pallipalayam V. Mettur ,Tamil Nadu ,Pondicherry ,
× RELATED பள்ளிபாளையம் மாணவி பங்கேற்பு