×

பாக்கு தோட்டங்களில் மருந்து தெளிப்பு

சேந்தமங்கலம், ஜூன் 6: கொல்லிமலை அடிவார பகுதிகளில் உள்ள பாக்கு தோட்டங்களில், களைக்கொல்லி மருந்து தெளிப்பு பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி, சின்ன காரவள்ளி, நடுக்கோம்பை, பெரிய பள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, வெண்டாங்கி, தாதன்கோம்பை, புளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பாக்கு மரங்கள் நடவு செய்துள்ளனர். பாக்கு மரங்களுக்கு அதிகளவில் தண்ணீர் தேவை படுவதால் எப்போதும் வயலில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்நிலையில் கடந்த மாதங்களில் போதிய மழை இல்லாததால் பாக்கு மரங்கள் காய்ந்து கருகியதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். தற்போது கொல்லிமலை அடிவார பகுதியில் மழை பெய்துள்ளதால் கொல்லிமலை வனப்பகுதியில் இருந்து நீரோடைகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால், விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பாக்கு தோட்டங்களில் அதிகளவில் களை செடிகள் முளைத்துள்ளது. அதனை அளிப்பதற்காக களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக வெளியூர்களில் இருந்து மருந்தடிக்கும் பணியாளர்களை அழைத்து வந்து மருந்து தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post பாக்கு தோட்டங்களில் மருந்து தெளிப்பு appeared first on Dinakaran.

Tags : Cucurbita ,Senthamangalam ,Kollimalay ,Senthamangalam Union ,Kollimalai ,Karavalli ,Chinna Karavalli ,Nadukombai ,Periya Pallamparai ,Chinnapallamparai ,Vendangi ,Dadankombai ,
× RELATED மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்