×

மழை, வெள்ளத்தால் 264 துணை சுகாதார நிலையங்கள் பாதிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : 4 மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் 264 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “64 ஆரம்ப சுகாதார நிலையங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.நாளை காலை 9 மணி முதல் 4 மணிவரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் இந்த முகாம்களை நடத்த உள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

The post மழை, வெள்ளத்தால் 264 துணை சுகாதார நிலையங்கள் பாதிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு சட்டபூர்வமான...