×

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை தர வேண்டும்: முதல்வருக்கு விசிக எம்எல்ஏ கடிதம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளரும், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து மனு ஏற்கப்பட்ட நிலையில் பல்வேறு எளிய விளிம்பு நிலை மக்களுக்கு இன்னமும் உரிய நிதி ஒதுக்கீடு இல்லை என அவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த உதவித்தொகை அங்கீகரிக்கப்பட்டதால் இவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாமல் போனது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திருப்போரூர் தொகுதியில், திருப்போரூர் வட்டத்தில் மட்டுமே சுமார் 200 பேரும் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் சுமார் 500 பேரும் உள்ளனர். இந்தநிலை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த உதவிதொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் மாதந்தோறும் உதவிதொகை வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை தர வேண்டும்: முதல்வருக்கு விசிக எம்எல்ஏ கடிதம் appeared first on Dinakaran.

Tags : Visika ,Chennai ,Deputy General Secretary ,Liberation Tigers Party ,MLA ,Tiruporur ,Constituency ,S.S.Balaji ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி