×

அறநிலையத்துறை திருச்சி மண்டலம் சார்பில் ரூ.3.45 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

 

திருச்சி, டிச.9: இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல திருக்கோயில்கள் சார்பில் ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணமாக ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 200 மதிப்பிலான பொருட்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல திருக்கோயில்கள் சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 200 மதிப்பிலான அரிசி, மளிகை, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் செயல் அலுவலர் மற்றும் இணை கமிஷனர் நேற்று வழங்கினார்.

ரூ.61 ஆயிரத்து 850 மதிப்பிலான ஆயிரத்து 237 கிலோ அரிசி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான 880 சேலைகள் உட்பட கோதுமை மாவு, பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், வேட்டி, போர்வை, மஞ்சள் துண்டு, கோரை பாய், துண்டு, பனியன், டவுசர், சுடிதார், சானிட்டரி நாப்கின், பேம்பர்ஸ், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் ஆகியன இவற்றில் அடங்கும்.

இந்த நிவாரணப்பொருட்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை கமிஷனர் வழங்கும் போது திருச்சி மாவட்ட உதவி கமிஷனர், திருவாணைக்காவல் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் திருக்கோயில் உதவி கமிஷனர், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமாணசுவாமி திருக்கோயில் உதவி கமிஷனர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அறநிலையத்துறை திருச்சி மண்டலம் சார்பில் ரூ.3.45 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Foundation's Church Zone ,Trichchi ,Hindu Religious Foundation Department ,Mikjam ,Trichchi Mandala ,Foundation Department ,Dinakaran ,
× RELATED 36 ஆண்டுகளாக பக்தர்கள் ஆவலுடன்...