×

குளித்தலை நகராட்சியில் மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரம்

 

குளித்தலை, டிச.9: குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி 24 வார்டுகள் உள்ளன. இதில் பெரியார் நகர், மீன்காரத்தெரு, பெரிய பாலம், வையாபுரி நகர், வைசியாள் தெரு, தெப்பக்குள தெரு, ஆர்எஸ்ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, கடைவீதி, பஜனை மடம், டவுன்ஹால் தெரு, எம்பிஎஸ் அக்ரஹாரம், பெரியாண்டார் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, காந்தி சிலை பஸ் நிலையம், காவிரிநகர், அண்ணா நகர், கடம்பர் கோவில் பகுதி, வைகைநல்லூர் அக்ரஹாரம், நாபாளையம், மணத்தட்டை, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் முக்கிய சாலைகள் மற்றும் குறுகிய தெருக்களும் இருந்து வருகிறது.

இப்பகுதியில் மின்விளக்கு வசதிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்தது. தற்பொழுது தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனம் மூலம் நகராட்சிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு நேரடியாக மின்விளக்குகள் பொருத்தும் பணியினை தொடங்கினர். இதனால் நகரின் முக்கிய சாலைகள் தெருக்கள் பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் புதிதாக பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் தற்பொழுது இரவு நேர மின் மொழியால் தயக்கம் இன்றி சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் விளக்குகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

The post குளித்தலை நகராட்சியில் மின்விளக்கு பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuluthalai Municipality ,Kulithalai ,Karur district ,Dinakaran ,
× RELATED குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் உலக...