×

தமிழ் உள்ளிட்ட மொழியில் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: தமிழ் உள்ளிட்ட மொழியில் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இந்திய ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம், அதிகாரப் பகிர்வு, மதச்சார்பின்மை ஆகியன இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பாகும். அந்த வகையில், அரசியலமைப்பின் அதிகார பகிர்வு குறித்த மிக முக்கிமான வழக்காக கருதப்படும் கேசவானந்த பாரதி வழக்கின் 50வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் புதிய இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசுகையில், ‘நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதில் மொழி ஒரு தடையாக இருக்கிறது. கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பின் விபரங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், ஒடியா, மலையாளம், குஜராத்தி, கன்னடம், பெங்காலி, அசாமி, மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கும்.

The post தமிழ் உள்ளிட்ட மொழியில் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kesawananda Bharati ,Supreme Court Chief Justice ,NEW DELHI ,SUPREME COURT CHIEF ,CHANDRASUET ,KESAVANANDA BHARATI ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி