×

ஜூன் 18ல் யு.ஜி.சி நெட் தேர்வு: விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்

சென்னை: யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.நடப்பாண்டுக்கான யு.ஜி.சி நெட் தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 18ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வர்கள் விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்று (மே 23ம் தேதி) நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், குறிப்பிட்ட இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

The post ஜூன் 18ல் யு.ஜி.சி நெட் தேர்வு: விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : UGC NET ,CHENNAI ,Dinakaran ,
× RELATED யு.ஜி.சி. நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு