×

திடீர் உடல்நலக்குறைவு ஷாருக்கான் அட்மிட்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி போட்டி அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடந்தது. இந்த போட்டியை பார்த்து தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்த ஷாருக்கான் மற்றும் அப்ராம், சுஹானா, அனன்யா, ஷனாயா ஆகியோர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்டிரோக், அதாவது, சூரிய வெப்பத்தால் ஏற்படும் ஸ்டிரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென்று ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கவலை அடைந்த ரசிகர்கள், அவரது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஷாருக்கான் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தியில் ‘பதான்’, ‘ஜவான்’, ‘டன்கி’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்த ஷாருக்கான், தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகிறார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

The post திடீர் உடல்நலக்குறைவு ஷாருக்கான் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Shah Rukhan ,Ahmedabad ,IPL ,Kolkata Knight Riders ,Sunrisers Hyderabad ,Shah Rukh Khan ,Shah Rukh Khan Admit ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்