×

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி

புதுடெல்லி: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் மற்றும் நிரந்தர கண் சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கு தொடங்குவது மற்றும் சிம்கார்டு வாங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், நேரடி டிஜிட்டல் செயல்முறையை முடிக்க முடியாத சூழல் இருப்பதால் மாற்று டிஜிட்டல் கேஒய்சி செயல்முறைக்கு உத்தரவிடக்கோரி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 9 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது மிகவும் முக்கியமான விவகாரம் என்றும் விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக பதிலளிக்க கோரி ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

The post ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...