×

செட்டிப்பாளையம் தடுப்பணையில் மண்டி கிடக்கும் புதர்

கரூர், டிச. 8: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகத்தை ஒட்டி வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றவேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பணை வளாகத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்க்கால்கள் செல்கிறது.

தடுப்பணை வளாகத்தில், தண்ணீர் வெளியேறும் பகுதியை சுற்றிலும் அதிகளவு முட்செடிகள் வளர்ந்து, தண்ணீரின் போக்கை மாற்றும் வகையில் செடி கொடிகள் ஆக்ரமித்துள்ளது. எனவே, பணியாளர்கள் மூலம் அகற்ற வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன.

இந்த காலக்கட்டங்களில்தான் அமராவதி ஆற்றில் அதிகளவு வெள்ளம் ஏற்படும். தற்போது வரை மழை பெய்யாத நிலையில், விரைவில் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரும் சூழல் உள்ளது. அப்போது, அதிகளவு வளர்நதுள்ள செடி கொடிகளால் தண்ணீரின் போக்கு பாதிக்க வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணை வளாகத்தை ஆக்ரமித்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்ற தேவையான வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post செட்டிப்பாளையம் தடுப்பணையில் மண்டி கிடக்கும் புதர் appeared first on Dinakaran.

Tags : Chettipalayam ,Karur ,Karur District ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்