புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், “தெலங்கானா மக்களின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதே போல், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. இந்த மாநிலங்களில் கட்சியின் தோல்வி ஏமாற்றமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த மாநிலங்களில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பவும், புத்துயிர் பெறவும் செய்வோம். தற்காலிக பின்னடவை சரி செய்து இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முழு அளவில் தயார்படுத்துவோம்,” என்று கூறியுள்ளார்.
The post ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல் காங்கிரஸ் தோல்வி ஏமாற்றமளிக்கிறது: கட்சி தலைவர் கார்கே வேதனை appeared first on Dinakaran.