×

குட்கா விற்ற கடைகளுக்கு ₹1000 அபராதம்

பாப்பிரெட்டிபட்டி, டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் குட்கா விற்பனை செய்த 27 கடைகளுக்கு தலா ₹1000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட பொம்மிடி, பையர்நத்தம், பள்ளிப்பட்டி, துறிஞ்சிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டல், மளிகைக்கடைகள், பீடா கடைகள், டீக்கடை மற்றும் கறிக்கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி குமணன், பொம்மிடி ேபாலீஸ் எஸ்ஐ., விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்குள்ள 10 ஓட்டல்கள், 7 பேக்கரி மற்றும் டீக்கடைகள், 10 பெட்டிக்கடை என மொத்தம் 27 கடைகளில் அதிகாரி சோதனை நடத்தினர்.

இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் எடையுள்ள 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், விதிமீறிய ஓட்டல் உரிமையாளருக்கு ₹2 ஆயிரம் அபராதமும், மீதமுள்ள அனைத்து கடைகளுக்கும் தலா ₹1000 அபராதம் விதித்தனர்.
தெடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்தால், கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

The post குட்கா விற்ற கடைகளுக்கு ₹1000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : gutka ,Paprirettipatti ,Dinakaran ,
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்