×

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி சமூகத்தரவு கணக்கெடுப்பு பயிற்சி

கோவில்பட்டி, நவ. 30: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பில் கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி உரிமைத்திட்ட சமூகத்தரவு கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சமூகத்தரவு கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர். வட்டார மேலாளர் சங்கர் வரவேற்றார். வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளி தலைமையாசிரியர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் வகைகள் மற்றும் கணக்கெடுப்பு குறித்து எடுத்துரைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் பேசினார். மாவட்ட பயிற்றுநர் கோகிலா, ஏஞ்சல் ஆகியோர் கைப்பேசியில் செயலியை எவ்வாறு தரவிறக்கம் செய்து கணக்கெடுப்பது குறித்து விளக்கி கூறினர். பயிற்சியில் கூட்டமைப்பு தலைவி தமிழ்ச்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, ராஜலட்சுமி, சுதா, மாற்றுத்திறனாளி பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் கில்டா, ஆனந்தசெல்வி, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி சமூகத்தரவு கணக்கெடுப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Tamil Nadu State Rural Livelihood Movement ,District Office of the Disabled ,
× RELATED கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம்