×

மகன் இறந்த வேதனை தந்தை தற்கொலை

திருச்சி, நவ.29: திருச்சியில் மகன் இறந்த மனவேதனையில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி உறையூர் குறத்தெரு கீழே வைக்கோல் கார தெருவை சேர்ந்தவர் மணி (56), டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் இறந்துவிட்ட நிலையில் கடும் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு குடிபோதையில் தனது வீட்டிற்கு வந்தவர், மறுநாள் தனது வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மகன் இறந்த வேதனை தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Vrayyur Kurateru ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...