×

கடலூர் முதுநகர் அருகே பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

 

கடலூர், நவ. 27: கடலூர் முதுநகர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அந்த ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்தி விசாரணையில், உயிரிழந்தவர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த சுபாஷ் (45) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் முதுநகர் அருகே பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Cuddalore Muthunagar ,Cuddalore ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு