×

புதுச்சேரி வாலிபர் சரமாரி வெட்டிக்ெகாலை

கலசபாக்கம், நவ.23: கலசபாக்கம் அருகே புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு விவசாய நிலத்தில் சடலம் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்து கடலாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கீழாத்தூர் கிராமத்தில் நேற்று மாலை விவசாய நிலத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி வழியாக வந்தவர்கள் உடனடியாக கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், ெகாலை செய்யப்பட்டவர் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஏழுமலை(18) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர் எதற்காக புதுச்சேரியில் இருந்து இங்கு வந்தார். அவரை கொலை செய்து விவசாய நிலத்தில் சடலத்தை வீசி சென்றவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக கொலை செய்தார்கள் என பல்வேறு கோணங்களில் கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரி வாலிபர் சரமாரி வெட்டிக்ெகாலை appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Dinakaran ,
× RELATED கலசபாக்கம் பகுதியில் ₹55.88 கோடி...