×

பெண் உள்பட 5 பேரிடம் ஆன்லைனில் ₹1.75 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 24: புதுவையில் ஆன்லைன் மோசடி கும்பல் கூறியதை நம்பி ஒரு பெண் உள்பட 5 பேர் ரூ.1.75 லட்சத்தை இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி குருமாம்பேட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கு தெரியாத நபர் போன் செய்து தனியார் வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது, கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரித்து ெகாடுப்பதாக கூறி ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். அவரும் ஓடிபி எண்ணை பகிர்ந்த சில நிமிடங்களில் திவ்யாவின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.97,181 முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காமராஜர் சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 20ம் தேதி அவரது ஏடிஎம் கார்டை தவறவிட்டுள்ளார். அதன்பிறகு, அவரது வங்கி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.31 ஆயிரம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சூரியகுமார் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.36,220, வில்லியனூர் மாதா கோயில் வீதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. வில்லியனூர் மேஸ்திரி தெருவை சேர்ந்த ரேஷ்னி என்பவர் ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது செயலாக்க கட்டணமாக ரூ.6,300 செலுத்தி ஏமாந்துள்ளார். மேற்கூறிய 5 பேரும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 701ஐ மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் உள்பட 5 பேரிடம் ஆன்லைனில் ₹1.75 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Divya ,Kurumampet ,
× RELATED புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை...