×

மிருகண்டா அணையின் நீர்மட்டம் மழையால் 13.95 அடியாக உயர்ந்தது நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி கலசபாக்கம் அருகே மேல்சோழங்குப்பத்தில் உள்ள

கலசபாக்கம், ஜூலை 21: கலசபாக்கம் அருகே மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 13.95 அடியாக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையின் மொத்த கொள்ளளவு 22.97 அடியாகும். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் கிணறு மற்றும் ஏரிப்பாசனத்தையே நம்பியுள்ளனர். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் விவசாயிகள் ஆடி சம்பா பட்டத்திற்கு நெல் விதை விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மிருகண்டா அணையின் நீர்மட்டமும் 13.95 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நெல் சாகுபடி பணியில் ஈடுபட உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போதைய பட்டத்திற்கு ஏற்ற வகையில் வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் நெல் விதைகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மிருகண்டா அணையின் நீர்மட்டம் மழையால் 13.95 அடியாக உயர்ந்தது நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி கலசபாக்கம் அருகே மேல்சோழங்குப்பத்தில் உள்ள appeared first on Dinakaran.

Tags : Mirukanda Dam ,Alsozhanupapapapam ,Kalasapakkam ,Galasapakkam ,Malchozhanupam ,Tiruvannamalai district ,Alsozhanupam ,Gakhshi Kalasapakkam ,Dinakaran ,
× RELATED சம்பா நெல் நடவு பணிகள் தீவிரம்...