கடலூர், நவ. 22: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் எம்பி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 46 மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் கடலூர் மேற்கு மாவட்டத்தில் வரும் 24ம் தேதி கபடி மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அமைப்பாளராக சி.வெ.க வெங்கடேஷ் என்பவர் செயல்படுவார். விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி இறகுப்பந்து போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான அமைப்பாளராக ஏ.பாலாஜி என்பவர் செயல்படுவார். இதுபோல் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் அடுத்த மாதம் 9ம் தேதி கிரிக்ெகட் போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான அமைப்பாளராக டாக்டர் ஏ.கே.கண்ணதாசன் என்பவர் செயல்படுவார். எனவே அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.
