×

சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற கட்டாய பதிவு: கலெக்டர் தகவல்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள் உரிமம் பெற கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் உரிமம் பதிவு செய்வதற்கான திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு, சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் முறையான உரிமம் பெறுவதற்கு மேற்கண்ட இணையதளத்தில் உடனடியாக கட்டாய பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகம், கோவளம் சாலை என்ற முகவரியிலும், 044-27442232 என்ற தொலைபேசி எண்ணிலும், 9176995869 என்ற அலைபேசியிலும், touristofficermpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

The post சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற கட்டாய பதிவு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...