×

தேவகோட்டையில் வ.உ.சி நினைவு தினம்

தேவகோட்டை, நவ.19: தேவகோட்டை வட்ட வஉசி பேரவை சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 87ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். தியாகிகள் பூங்கா முன்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தார். அனுமந்தக்குடி வீரபத்திரன், பொருளாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். பேரவை நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணியினர் கலந்துகொண்டு வஉசி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். செயலாளர் ராஜூ நன்றி கூறினார்.

The post தேவகோட்டையில் வ.உ.சி நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : V.U.C Memorial Day ,Devakottai ,Devakottai District Vausi Council ,Chekmal Semmel V.U.C ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்