×

சூலூரில் திமுக இளைஞரணி வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு

 

சூலூர், நவ.19: கோவை மாவட்டம், சூலூரில் திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் நடந்து வரும் இரு சக்கர வாகன பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் 2-வது மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணி நேற்று மாலை சூலூர் வந்தடைந்தது. சூலூரில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்க்கெட் ரோடு பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சூலூர் ஒன்றிய செயலாளர்கள் மன்னவன் அன்பரசு மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பிஎஸ் செல்வராஜ், புஷ்பலதா, ராஜகோபால், தேவி மன்னவன், மாநில செய்தி தொடர்பாளர் சித்திக், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் உதயபூபதி, நகர செயலாளர் கௌதமன், மாணவரணி அமைப்பாளர் பிரபு, சுற்றுச்சூழல் அணி செயலாளர் விஜயகுமார், இளைஞர் அணி மேகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சூலூரில் திமுக இளைஞரணி வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Sulur ,Tamil Nadu ,Sulur, Coimbatore ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது