×

சென்னை இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: வாலிபர் கைது

தஞ்சை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தச்சன்குறிச்சியைச் சேர்ந்த இளம்பெண் சென்னையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பெற்றோர் இல்லை. இதனால் தாய் மாமா வீட்டிற்கு தீபாவளி விடுமுறைக்காக வந்திருந்தார். அவரது மாமியார் வீடு தஞ்சாவூர் அருகே வல்லம் நாட்டாணியில் உள்ளது. இந்நிலையில் அவர் நண்பர்கள் கருப்பசாமி (30), தீனா (33) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் மாலை மது அருந்தினார்.

பின்னர் மாமியார் வீட்டில் நடந்த கறி விருந்துக்காக பைக்கில் கருப்பசாமி, தீனா ஆகியோருடன் வந்தார். பின்னர் தச்சன்குறிச்சி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அழைத்து வரும்படி கருப்பசாமியை பைக்கில் அனுப்பினார். வெகு நேரமாகியும் அவர்கள் வரவில்லை. செல்போனில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதற்கிடையே வல்லம் அருகே சென்னம்பட்டி முதலை முத்துவாரி காட்டுப்பகுதியில் இளம்பெண் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் சென்று பரிசோதித்ததில் இறந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வல்லம் போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அது சென்னையை சேர்ந்த இளம்பெண் என்பதை உறுதிபடுத்தினர். இதையடுத்து போலீசார் கருப்பசாமியை பிடித்து விசாரித்தபோது, அவர் இளம்பெண்ணை அழைத்து வந்தபோது 2 பேர் வழிமறித்து தன்னை தாக்கி விட்டு கடத்திச் சென்றதாக தெரிவித்தார். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் போதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததையும், இதுபற்றி நண்பரிடம் கூறுவேன் என்று அவர் மிரட்டியதால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சென்னை இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tanjore ,Kandarvakkottai Dachankurichi ,Pudukottai ,
× RELATED சாலியமங்கலம் பகுதியில் உலர்களம் இல்லாததால் நெல் காயவைப்பதில் சிரமம்