×

புலியை கூண்டு வைத்து பிடிக்ககோரி மூணாறில் தர்ணா போராட்டம்

 

மூணாறு, நவ. 18: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மற்றும் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் மூணாறில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் 44 பசுக்களை புலி தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் புலி தாக்கி உயிரிழந்த பசு மாடுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக் கோரியும், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் சி.பி.ஐ வட்டாரக் குழு தலைமையில் மூணாறு வனத்துறை அலுவலகம் முன்பு பால் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர் நாராயணன் துவக்கி வைத்து பேசினார்.இதல் வார்டு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, ஆரோக்கியதாஸ், டக்லெஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post புலியை கூண்டு வைத்து பிடிக்ககோரி மூணாறில் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharna ,Munnar ,Idukki district ,Kerala ,Dinakaran ,
× RELATED ‘படையப்பா’ அரசு பேருந்தை மறித்து...