புதுடெல்லி: பிஆர்எஸ் கட்சியின் 5 எம்பிக்களுக்கு மாநிலங்களவை சிறப்புரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்த போது கடந்த செப்.18ம் தேதி தெலங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் கட்சியின் எம்.பி.க்களான கே.கேசவ ராவ், கே.ஆர்.சுரேஷ் ரெட்டி, தாமோதர் ராவ் திவகொண்டா, வத்திராஜூ ரவிச்சந்திரா மற்றும் பி.லிங்கய்யா யாதவ் ஆகியோர் அவையில் பிளக்ஸ் கார்டுகளை காண்பித்ததற்காக சிறப்புரிமை மீறல் புகாருக்கு சிறப்புரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 5 எம்பிக்களும் நவம்பர் 28ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.
The post பிஆர்எஸ் கட்சியின் 5 எம்பிக்களுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.
