×

காக்கை தொட்டு சென்றால் என்ன செய்வது?

காக்கை சனி பகவானின் வாகனமாகும். பொதுவாக காக்கை பயந்த சுபாவம் உடையது. மனிதர்களின் முகங்களை கண்காணிக்கும் ஆற்றல் உண்டு. மனிதர்கள் அருகில் வந்தாலே பயந்து விலகக்கூடிய காக்கை, சில சமயங்களில் தனது இறக்கையால் தலையில் கொத்திச் செல்லும் அல்லது தலையில் தட்டிச் செல்லும். இது சனி தோஷம் உள்ளதை குறிக்கும். இதற்கு எதுவும் அச்சம் வேண்டாம்.

தாங்கள் குளித்துவிட்டு அணிந்திருக்கும் உடையை யாருக்காவது தானம் செய்துவிடுங்கள். பின்பு, ஊனமுற்றவர்களுக்கோ அல்லது வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் யாருக்காவது உங்களால் முடிந்த அளவு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். அது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷத்தை குறைக்கும்.

The post காக்கை தொட்டு சென்றால் என்ன செய்வது? appeared first on Dinakaran.

Tags : Sani Lord ,
× RELATED மகரத்திலிருந்து கும்பத்திற்கு இடம்...