×

ரயில்வே சுரங்கபாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்

 

சேலம், நவ.6: சேலம் கொண்டலாம்பட்டியில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஊர்மக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். சேலத்தில் இருந்து மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக கரூர் வரை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிப்பாதையில் கொண்டலாம்பட்டியில் இருந்து புத்தூர் வரை செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கபாதை உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. பல நாட்களாக மழைநீர் ேதங்குவதால் பாசிபடர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சுரங்கபாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, சாலையை பயன்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ரயில்வே சுரங்கபாதையில் தேங்கி நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kondolampatti ,Puttur ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...