×

போருக்கு தயாராக இருப்பது அமைதிக்கான வழி: துணை ஜனாதிபதி விளக்கம்

புதுடெல்லி: போருக்கு தயாராக இருப்பது அமைதிக்கான வழியாகும் என்று துணைக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறினார். டெல்லியின் மானெக்ஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசுகையில், ‘அமைதி என்பது விருப்பம் மட்டுமல்ல; அதுதான் சிறந்த ஒரே வழி. அமைதிக்கு சீர்குலைவு ஏற்பட்டால், மனித சமூகத்திற்கு துயரங்களும், உலகளாவிய சவால்களும் அதிகரிக்கும். எல்லா நிலையிலும் அமைதியைத் தேட வேண்டியது அவசியமாகிறது.

இருந்தாலும் வலிமையான நிலையில் இருந்து தான், அமைதி பாதுகாக்கப்படுகிறது. போருக்குத் தயாராக இருப்பது அமைதிக்கான வழியாகும். உலகப் பொருளாதார முன்னணி நாடுகளில் இந்தியாவும் பயணிக்கிறது. நாட்டின் அற்புதமான வளர்ச்சியானது, உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான காரணியாக அமையும். தேசத்தின் வலிமை மிகவும் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், குவாண்டம், செமி-கண்டக்டர்கள், பயோடெக், ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் நமது திறனை வெளிப்படுத்த முடியும்.

உலகின் மிக சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் ஆன்மீக சிந்தனையாளர்கள், இந்தியாவை கர்மபூமி என்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிக நெறிமுறையுடன் இந்தியா உயிர்ப்பித்துள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழல்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேசிய பாதுகாப்பு என்பது திறன்களின் தொகுப்பாகும். ராணுவம் என்பது அதன் ஒரு பகுதி மட்டுமே’ என்றார்.

The post போருக்கு தயாராக இருப்பது அமைதிக்கான வழி: துணை ஜனாதிபதி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Vice President ,Jagdeep Dhankar ,Delhi's… ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...