×

டாஸ்மாக் கடை பின்பக்க சுவரில் துளையிட்டு ₹6 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் திருட்டு லோடு ஆட்டோவில் தப்பிய ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே துணிகரம்

வந்தவாசி, நவ.2: வந்தவாசி, அருகே டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு ₹6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை லோடு ஆட்டோவில் திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வாச்சனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன்(39) என்பவரும், சூபர்வைசராக தானிப்பாடியை சேர்ந்த சேகர்(51) என்பவரும் பணி புரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விற்பனையான தொகையை எடுத்துக்ெகாண்டு இருவரும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வந்து கடையை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். கடையின் பின்புறம் உள்ள சுவரில் பெரிய அளவிலான துளை போடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலு, கடையில் இருந்த சுமார் ₹6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் பொதுமேலாளர் புஷ்பலதா அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், கோவிந்தராஜிலு மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு மர்ம ஆசாமிகள் லோடு ஆட்டோவில் மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர். டாஸ்மாக் கடையை துளையிட்டு மதுபானங்களை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டாஸ்மாக் கடை பின்பக்க சுவரில் துளையிட்டு ₹6 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் திருட்டு லோடு ஆட்டோவில் தப்பிய ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Velabandavasi ,Vandavasi ,
× RELATED மக்கள் கோரிக்கை தொடர்பாக...