×

கத்தாருக்கு போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: மேடவாக்கம் அஞ்சலகத்தில் இருந்து பார்சல் மூலமாக வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் சென்னை மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனையிட்டபோது, கத்தார் தலைநகர் தோகாவிற்கு பார்சல் மூலம் அனுப்ப இருந்த 194 கிராம் மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேடவாக்கத்தில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த கிளென் தாமஸ் (38) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தியதாக கிளென் தாமசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

The post கத்தாருக்கு போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Qatar ,Chennai ,Medavakkam ,Dinakaran ,
× RELATED மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல்