×

களக்காடு அருகே ஆடுகளை திருட முயன்ற வாலிபர் கைது

களக்காடு, அக்.28: நாங்குநேரி அருகேயுள்ள வரமங்கைபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் மாரி(22). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் களக்காடு அருகேயுள்ள சத்திரம் கள்ளிகுளம் ஆட்டு கிடை அமைத்து, 100 ஆடுகளை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த தவமணி மகன் ரமேஷ் (37) என்பவர் மாரியிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவரும் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்து விட்டு ரமேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கிடைக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கலைந்து ஓடின. மேலும் சத்தமும் எழுப்பின. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரி ஓடி சென்று பார்த்த போது, ரமேஷ் கிடைக்குள் புகுந்து ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த மாரி சத்தம் போட்டதால் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மாரி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரமேஷை கைது செய்தனர்.

The post களக்காடு அருகே ஆடுகளை திருட முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,Ramaiah son Mari ,Southern Street ,Varamankaipuram ,Nanguneri ,Dinakaran ,
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...