×

புதுக்கோட்டை திருமயம் அருகே அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி

திருமயம்: திருமயம் அருகே அனுமதியின்றி இயங்கிய கல்குவாரியில் அதிகாரிகள் 2 டிப்பர், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் பகுதியில் அதிக அளவு கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்கி வருவதாக புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய் ஆய்வாளர் முருகேசன், திருமயம் தாசில்தார் புவியரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரி வருவதை அறிந்து சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரி உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகள் இரண்டு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டும் வரும் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட லாரி, பொக்லைன் இயந்திரத்தை திருமயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post புதுக்கோட்டை திருமயம் அருகே அனுமதியின்றி இயங்கிய கல்குவாரி appeared first on Dinakaran.

Tags : Pudukottai Thirumayam ,Tirumayam ,Pudukottai ,Kalquary ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதியில்...