×

புதுவையில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயம் கடத்திய 2 பேர் கைது

கடலூர், அக். 28: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் துறைமுகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில், தலைமை காவலர் நெப்போலியன், தனிப்பிரிவு சிவஞானம் ஆகியோர் நேற்று காலை பச்சையாங்குப்பம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவின் பின்புறம் சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அந்த சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது புதுவண்டிபாளையம் முருகா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாவாடைராயன் (36) என்பதும், அவருடன் வந்தது புதுவண்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரத்குமார் (31) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயத்தை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 30 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் கடத்தல்
ஆட்டோவில் சாராயம் கடத்தி வந்தவர் ஆட்டோவின் பின்புறம் இதற்காகவே ஒரு அறைபோன்று தயார் செய்துள்ளார். போலீசார் வழக்கமாக சோதனை செய்தால் ஆட்டோவில் ஒன்றும் இல்லாததுபோல் தெரியும். ஆனால் மேலே இருக்கும் தகடுகளை நீக்கி உள்ளே சென்று பார்த்தால்தான் சாராயம் இருப்பது தெரியவரும். போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர சோதனை செய்து சாராயத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post புதுவையில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயம் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Chidambaram ,Cuddalore ,Puducherry ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு