×

அரசு பள்ளி மாணவி முதலிடம்

இளம்பிள்ளை, அக்.26: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், இடைப்பாடியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி தர்ஷ்னா, கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார். அவருக்கு ₹25 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கே.கே.நகர் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் இடங்கணசாலை நகர திமுக செயலாளர் செல்வம், பிடிஏ தலைவர் தளபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி தங்கராஜ், தலைமை ஆசிரியை பொற்கொடி மற்றும் அழகேசன், மகேந்திரன், உத்தரகுமார், சித்தையன், ரமேஷ், சண்முகம், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கும், பல்வேறு போட்டிகளில் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

The post அரசு பள்ளி மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Salem West District DMK ,
× RELATED ராஜீவ்காந்தி நினைவு தினம்