×

அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்ட நுகர்வோர் அமைப்பும், ஆறுகாட்டுத் துறை உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இணைந்து நடத்திய அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம் ஆறு காட்டுத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கலைக்கோவன் தலைமையில் நடைபெற்றது. அயோடின் கலந்த உப்பின் அவசியம், அதன் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் பற்றியும் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வீரசுந்தரம், அமைப்பின் செயலர் தேசிய நல்லாசிரியர் செல்வராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் அரிமா வட்டார தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற அமைப்பாளர் செல்லப்பா நன்றி கூறினார்.

The post அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Vedaranyam Circle Consumer Organization ,Arukhat Sector High School Citizens Forum ,Iodine Salt ,Awareness Camp ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில்...