×
Saravana Stores

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்றவர் கைது

 

வேதாரண்யம், ஜூலை 21: வேதாரண்யம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது கஞ்சா விற்ற ஒருவரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து விசாரித்ததில் புஷ்பவனம் முத்துக்கவுண்டர்காடு வீரப்பன் மகன் காஞ்சியப்பன் (41) என்பதும், அவர் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, காஞ்சியப்பனை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

The post வேதாரண்யம் அருகே கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Vedaranyam ,Vedaranyam ,Nagapattinam District ,Vedaranyam Police ,Inspector ,Dhar ,Pushpavanam ,Dinakaran ,
× RELATED கோடியக்கரையில் குவிந்த வெளிநாட்டு...