கள்ளக்குறிச்சி, அக். 18: கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, தமிழ்துறை தலைவர் தமிழ்துறை மற்றும் தமிழ் பாடம் நடத்தும் அனைத்து துறைகளிலும் பாவை புத்தகம்(கைடு) விற்பனை செய்து வருகிறார். நாங்கள் ஏற்கனவே புத்தகம் மற்றும் கைடு வைத்திருக்கிறோம் வேண்டாம் எனக் கூறினாலும் கட்டாயப்படுத்தி வாங்கியே ஆக வேண்டும் என வற்புறுத்துகிறார். வாங்கவில்லை எனில் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம், இன்டனல் மார்க்கை குறைத்து விடுவோம் என மிரட்டுகிறார்.
மேலும் தமிழ்துறை சார்பில் மாதம் ஒருமுறை விழா நடக்கும். அப்போது விழா செலவு, ஆசிரியர்களின் மதிய உணவு போன்ற செலவிற்கு தமிழ்துறையில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் செய்கிறார். மேலும் பி.காம் வணிகவியல் துறைத்தலைவர் பி.காம் மற்றும் எம்.காம் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரிடமும் புத்தகம், நோட்ஸ் வாங்கியாக வேண்டும் என கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.3000 வசூல் செய்துள்ளார். எனவே கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் கட்டாயப்படுத்தி புத்தகம், நோட்ஸ் விற்பனை செய்து வரும் இரண்டு துறை பேராசிரியர்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
The post கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் மாணவர்களை மிரட்டி புத்தகம், நோட்ஸ் விற்கும் ஆசிரியர்கள் appeared first on Dinakaran.
