×

திருமயம் அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

திருமயம்: புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் மொய்தீன் அப்துல் காதர் மகன் முகமது ஹபிபுல்லா (20), அதே பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா மகன் அபுதாஹிர் (21). இரண்டு பேரும் நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து பெருங்குடி சாலை வழியாக புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை முகமது ஹபிபுல்லா ஓட்டியுள்ளார். அப்போது முனசந்தை விலக்கு அருகே பைக் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஹபிபுல்லா, அபுதாஹிரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது ஹபிபுல்லா உயிரிழந்தார். காயமடைந்த அபுதாஹிர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Moideen Abdul Qader ,Pudukottai Nizam Colony ,Mohammad Habibullah ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதியில்...