×

அதிமுக 52ம் ஆண்டு விழா

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் 52ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராஜா கவுண்டம் பாளையத்தில் முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி அதிமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதேபோல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பரணிதரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் மற்றும் மகளிரணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அதிமுக 52ம் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : AIADMK 52nd Anniversary ,Tiruchengode ,Tiruchengode Assembly Constituency ,AIADMK ,Raja Gauntam Palayam ,AIADMK 52nd Anniversary Ceremony ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்