- போபன்னா
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்
- ஷாங்காய்
- இந்தியா
- ரோகன் போபனா
- ஷாங்காய் முதுநிலை
- சீனா
- மேத்யூ
- தின மலர்
ஷாங்காய்: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை தகுதி பெற்றது. அரையிறுதியில் பிரான்சின் ஃபேபியன் ரெபோல் – சாடியோ டவும்பியா இணையுடன் மோதிய போபண்ணா ஜோடி 7-6 (7-0), 4-6, 10-2 என்ற செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மார்செலோ கிரனோலர்ஸ் (ஸ்பெயின்) – ஹோரசியோ ஜெபல்லோஸ் (அர்ஜென்டீனா) இணையுடன் போபண்ணா – எப்டன் ஜோடி மோதுகிறது.
The post ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி appeared first on Dinakaran.