×

பன்னீர் ரோஜா விளைச்சல் அதிகரிப்பு

ராயக்கோட்டை, அக்.12: ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் பன்னீர் ரோஜா பூவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். பூ விளைச்சலுக்கான சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், நல்ல மழைப்பொழிவால் ஈரப்பதம் இருப்பதால், பன்னீர் ரோஜா பூக்கள் தரமானதாகவும், அளவில் பெரியதாகவும் விளைச்சலாகியுள்ளது. கடந்த மாதங்களில் கிலோ பூ ₹150வரை விற்பனையானது. ஆனால் பரட்டாசி மாதம் பிறந்த பின்பு, விழாக்கள், திருமண முகூர்த்தங்கள் இல்லாததால், பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால் ஒரு கிலோ பூ ₹15க்கு கூட வாங்க ஆளில்லாததால் பறித்து வந்த பூக்களை, சாலையோரம் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதேபோல மற்ற பூக்களும் விலையில்லாமல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post பன்னீர் ரோஜா விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை