×

பைக் விபத்தில் தொழிலாளி பலி

களக்காடு,அக்.11: நாங்குநேரி அருகே உள்ள பாகநேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (60). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் பரப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீர் என பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post பைக் விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Kalkaku ,Tangathurai ,Baganeri South Street ,Nanguneri ,Dinakaraan ,
× RELATED திருக்குறுங்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்