×

வேப்பூர் பகுதியில் கோடை மழை

குன்னம், மே15:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாத நிலைமை இருந்தது.இந்நிலையில் நேற்று குன்னம், வேப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மதியம் 12 மணியளவில் பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்ததுஇதில் பென்னகோணம், வடக்கலூர், வடக்கலூர் அகரம், கிழுமத்தூர், கீழப்பெரம்பலூர், ஆய்குடி, கைப்பெரம்பலூர், ஒகளூர், அகரம்சீகூர், கீரனூர், பெருமத்தூர், எழுமூர், வேப்பூர், கிளியூர், அத்தியூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்று வீசியது.பின்னர் மழை பெய்தது. கோடை காலம் என்பதால் வெப்பம் தணிந்து அப்பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

அனைத்து ஓட்டுனர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அணிந்து தான் வாகனத்தை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

The post வேப்பூர் பகுதியில் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Veypur ,Gunnam ,Kunnam ,Perambalur district ,Dinakaran ,
× RELATED குன்னத்தில் வாய்த்தகராறில் தந்தையை கீழே தள்ளி கொலை செய்த மகன் கைது