×

திருக்குறுங்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்

களக்காடு: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவஞ்சிபுரத்தில் திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகோபாலலிங்கம், போலீஸ்காரர் விஜயமாரீஸ்வரன் (28) மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நம்பிதோப்பு, ராமானுஜம் புதுத்தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சரண்ராஜ் (18), வெற்றிவேல் முருகன் மகன் காதர் (19) ஆகியோர் பைக்கில் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி, பைக்கை சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரும் போலீஸ்காரர் விஜயமாரீஸ்வரனை அவதூறாக பேசி, அவரை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி விட்டனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராஜ், காதர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post திருக்குறுங்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Tirkungungudi Kalkaku ,Thirukurungudi ,Sub ,Harikopalingam ,Vijayamariswaran ,Tirkurungudi ,Dinakaraan ,
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்