×

பெரம்பலூர் அருகே செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தை தரம் உயர்த்துவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி முன்னிலை வகித்தார். பள்ளி சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம், தன் சுத்தம் பேணுதல், குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல், தனிநபர் இல்லக்கழிப்பறை பயன்படுத்துதல், குடிநீரை சுத்தமாக காய்ச்சி வடிகட்டி குடித்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. முடிவில், ‘தூய்மையே சேவை’ குறித்த சுகாதார உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

The post பெரம்பலூர் அருகே செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chettikulam Government Primary Health ,Center ,Perambalur ,Padalur ,Chettikulam Government ,Department of Rural Development and Panchayats ,Aladhur ,Chettikulam Government Primary Health Center ,Dinakaran ,
× RELATED சிறுதானியங்களுக்கான வணிக மேம்பாட்டு...